UPI பற்றி
யூனிஃபைட் பேமெண்ட் இண்டர்ஃபேஸ் (UPI) என்பது இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்கிற்கு உடனடியாகப் பணப் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கும் பேமெண்ட் முறையாகும்.
UPI ID ஐப் புரிந்துகொள்ளுதல்
UPI ID என்பது ஒரு நபரைத் தனித்துவமாக அடையாளம் காணும் மெய்நிகர் கட்டண முகவரியாகும் (VPA). UPI ID வடிவம் என்பது மின்னஞ்சல் ID போன்றது: நடுவில் “@” என்ற அடையாளத்துடன் கூடியது. எடுத்துக்காட்டாக, உங்கள் பெறுநரின் UPI ID பெறுநரின்_பெயர்@bank_name அல்லது phone_number@bank_name ஆக இருக்கலாம்.UPI ID உடன் அனுப்பும்போது, உங்கள் பெறுநரின் UPI ID-ஐ மட்டும் வைத்திருக்க வேண்டும். பெறுநர்களின் கணக்கு எண், கணக்கு வகை, வங்கியின் பெயர் அல்லது IFSC குறியீட்டை நீங்கள் கேட்க வேண்டியதில்லை.
பேமெண்ட்டைப் பெற, பெறுநரின் UPI ID ஐ சர்வதேச UPI பணம் அனுப்புவதற்கு செயலாக்கப்பட்ட வங்கியுடன் இணைக்க வேண்டும்.
சர்வதேச UPIஐ ஆதரிக்கும் வங்கிகளின் பட்டியலைக் கீழே பார்க்கவும். சர்வதேச UPI பரிமாற்றத்தை ஆதரிக்கும் வங்கிகளின் தற்போதைய பட்டியல். தற்போது ஆதரிக்கப்படும் வங்கிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் பல வங்கிகள் விரைவில் கிடைக்கப்பெறும்.
UPI ஐப் பயன்படுத்தி வரம்புகளை அனுப்பவும்
தற்போது, நீங்கள் ஒரு பரிமாற்றத்திற்கு 200,000 INR வரை அனுப்பலாம்.
Western Union மூலம் UPI ஐப் பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கான படிநிலைகள் சர்வதேச அளவில் UPI பரிமாற்றத்தைப் பயன்படுத்தும் முதல் பணப் பரிமாற்ற சேவை நிறுவனம் Western Union ஆகும்.
1. உங்கள் Western Union சுயவிவரத்தில்உள்நுழைக .
2. பெறும் நாடாக நீங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுக்கவும் (உங்கள் பெறுநரின் அஞ்சல் முகவரியை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்).
3. வங்கி பேஅவுட்டைப் பயன்படுத்தி அனுப்பத் தேர்வுசெய்து எந்த பேமெண்ட் முறையையும் பயன்படுத்தவும்.
4. வங்கித் தகவல் பிரிவின் கீழ் UPI ID ஐத் தேர்ந்தெடுக்கவும். சர்வதேச UPI பரிமாற்றத்திற்காக இயக்கப்பட்ட அனைத்து வங்கிகளையும் நீங்கள் உலாவ முடியும்.
5. உங்கள் பரிமாற்றத்தை அனுப்புக என்பதைத் தேர்வு செய்யவும்.
பொதுவாக, உங்கள் பரிமாற்றம் சில நிமிடங்களில் முடிந்து விடும்.
Western Union செயலியைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் அனுப்பலாம். உங்களின் பணம் சென்றடையக்கூடிய நாட்டைத் தேர்ந்தெடுத்த பிறகு, கிடைக்கும் சேவைகளின் வகைகளைப் பார்ப்பீர்கள்.
நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், இந்தச் சேவைக்காக உங்கள் அட்டை வழங்குநரால் கூடுதல் ரொக்க முன்பணக் கட்டணம் வசூலிக்கப்படலாம். நீங்கள் டெபிட் அல்லது ப்ரீபெய்ட் கார்டைப் பயன்படுத்தினால் கட்டணத்தைத் தவிர்க்கலாம். ரொக்க முன்பணக் கட்டணம் தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு உங்கள் வழங்கும் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான கோரிக்கையைப் பெற்றவுடன், உங்கள் பணப் பரிமாற்ற விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, உங்கள் கோரிக்கை செயல்படுத்தப்படும். வழக்கமாக ஒரு புதிய MTCN (கண்காணிப்பு எண்) ஐ உருவாக்க 24 மணிநேரம் ஆகும், அதை நீங்கள் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறப் பயன்படுத்தலாம்.
காலை 8 மணி முதல் 12 மணி வரை ஆங்கிலம் அல்லது சீன மொழியில் (மாண்டரின்) ஆதரவுக்காக எங்கள் வாடிக்கையாளர் சேவையை 65 6336 2000 என்ற எண்ணில் அழைத்து பணத்தைத் திரும்பப்பெறக் கோரலாம். ஆங்கிலத்தில் ஆதரவு பெற நீங்கள் SingaporeEnglish.customer@westernunion.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது சீன மொழ் ஆதரவுக்கு SingaporeMandarin.customer@westernunion.com ன்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். கண்காணிப்பு எண் (MTCN) உள்ளிட்ட உங்கள் பணப் பரிமாற்ற விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். கூடுதல் சரிபார்ப்புக்காக உங்கள் வங்கி அறிக்கையைப் பகிர வேண்டியிருக்கலாம். அவ்வாறு செய்ய, உங்கள் பெயர், வங்கிப் பெயர், கணக்கு எண் மற்றும் பரிமாற்ற விவரங்களைத் தெளிவாகக் காட்டும் PDF படத்தை மேற்கூறிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். ஒரு கோரிக்கையை எழுப்பியவுடன், நீங்கள் ஒரு டிக்கெட் எண்ணைப் பெறுவீர்கள். உங்கள் பணத்தைத் திரும்பப்பெறும் நிலையைக் கண்காணிக்க இதைப் பயன்படுத்தவும். உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விவரங்களை மின்னஞ்சல் மூலமாகவும் பகிர்ந்து கொள்வோம். பிக்-அப்பிற்குத் தயாரானதும், தேர்ந்தெடுக்கப்பட்ட Western Union ஏஜெண்டுகளில் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுங்கள்.
ஆன்லைனில் உங்களின் முதல் பணப் பரிமாற்றத்திற்கு, நீங்கள் ஒரு தனிப்பட்ட ஆன்லைன் சுயவிவரத்தை உருவாக்கி, உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவேண்டும். உங்கள் சுயவிவரம் சரிபார்க்கப்பட்டதும், உங்களால் ஆன்லைனில் பணம் அனுப்ப முடியும். உங்கள் சுயவிவரத்தை உடனடியாகச் சரிபார்க்க முடியாவிட்டால், செயலியில் அவர்களின் பரிமாற்றத்தைத் தொடங்கி, அருகிலுள்ள ஏஜெண்ட் இருப்பிடத்திற்கு செலுத்துவதன் மூலம் பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம் என்பதை நினைவில் கொள்ளவும். பதிவு செய்யும் போது ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் வாடிக்கையாளர் சேவையை (மாண்டரின் நேரம் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டும்) தொடர்பு கொள்ளவும்.
வங்கியின் கொள்கையின் காரணமாக Western Union உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைச் சேமிப்பதில்லை. எனவே, உங்கள் பணத்தை நேரடியாக உங்கள் கணக்குக்குப் பரிமாற்றம் செய்ய முடியாது.
முதல் பரிமாற்றத் தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் Alipay வாலெட்டில் ஒரே ரிசீவருக்கு 5 பரிமாற்றங்கள் வரை செய்யலாம். அவசரம் என்றால், வங்கிக் கணக்கு அல்லது ரொக்கம் போன்ற வேறு பேஅவுட் முறையை நீங்கள் எப்போதும் தேர்வு செய்யலாம்.
உங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு (Visa® அல்லது Mastercard® மட்டும்) அல்லது நேரடி வங்கிப் பரிமாற்றம் மூலம் உங்கள் பணப் பரிமாற்றத்திற்கு ஆன்லைனில் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும் போது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் வாடிக்கையாளர் சேவையை ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் (மாண்டரின் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டும்) தொடர்பு கொள்ளவும்.
பணப் பரிமாற்றக் கட்டுப்பாட்டு எண் (MTCN) என்பது உங்கள் பரிமாற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட எண்ணாகும். உங்கள் பெறுநர் பணத்தைப் பெறும்போது அவருக்கு இந்த எண் தேவைப்படும், மேலும் இது உங்கள் பரிமாற்றத்தைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்படலாம்.
இந்த Western Union இன் ஏதேனும் ஓர் ஏஜெண்ட் இருப்பிடங்களில் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம்:
லக்கி பிளாசா4
கெர்பாவ் சாலை
ஜூரோங் பாயிண்ட்
பென்ஜூரு RC
அங் மோ கியோ MRT
கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ்
லக்கி சைனாடவுன்
ஃபோர்டுனா ஹோட்டல்
Ubi
உட்லண்ட்ஸ் RC
ஈஷுன் இன்டர்சேஞ்ச்
ஜூரோங் கிழக்கு
துவாஸ் வியூ டொர்மிட்டோரி
கிராஞ்சி இண்டஸ்டிரியல்
காக்கி புக்கிட் RC
பாயா லெபார் MRT
ஜாலான் டெருசன் RC
துவாஸ் தெற்கு RC
சோவா சூ காங் MRT
PPT லாட்ஜ் 1B
Tampines MRT
முழு முகவரிக்கு எங்கள் லொகேஷன் ஃபைன்டரில் பெயரை உள்ளிடவும்.
நீங்கள் பணம் அனுப்பக்கூடிய அனைத்து நாடுகளையும் “ஆன்லைனில் சரிபார்க்கவும்” என்பதில் மேற்கொள்ளலாம். எங்களின் நேரடி வங்கிக் கணக்குச் சேவையைப் பயன்படுத்த விரும்பினால், எங்கள் கண்ட்ரி லொக்கேட்டர் எனும் கருவிமூலம் இந்த விருப்பத்தேர்வு உள்ள நாடுகளைச் சரிபார்க்கவும். சிங்கப்பூருக்குள் பரிமாற்றங்கள் செய்ய இயலாது.
சென்றடையும் நாட்டில் பெறுநரால் பெறப்படாவிட்டால் மட்டுமே ஆன்லைன் பணப் பரிமாற்றம் ரத்துசெய்யப்படும். உங்கள் பணப் பரிமாற்றத்தை ரத்துசெய்ய விரும்பினால், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் (மாண்டரின் நேரம் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டும்) 65 6336 2000 என்ற எண்ணில் எங்கள் Western Union வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்கவும் அல்லது (உங்களுக்கு ஆங்கிலத்தில் ஆதரவு தேவைப்பட்டால்)SingaporeEnglish.customer@westernunion.com க்கு மின்னஞ்சல் அனுப்பவும், அல்லது சீன மொழி பேசுபவர்களுக்கு SingaporeMandarin.customer@westernunion.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.
ஆம், பரிமாற்றம் முடிந்ததும் உங்கள் மின்னஞ்சலுக்கு ரசீது அனுப்பப்படும். Western Union செயலியில் உள்ள உங்கள் வரலாற்றுப் பிரிவில் உங்கள் அனைத்துப் பரிமாற்றங்களின் விவரங்களையும் பார்க்கலாம்.
சரிபார்க்கப்பட்ட பயனர்கள் இப்போது PayNow-ஐப் பயன்படுத்தி பெறுநர்களின் வங்கிக் கணக்கிற்கு ஒரு பரிமாற்றத்திற்கு 20.000 SGD வரை
அனுப்பலாம். மற்ற பேமெண்ட் முறையிலான சேர்க்கைகளுக்கு, ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு 5.000 SGD ஆக இருக்கும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது*.
*பணம் அனுப்பக்கூடிய வரம்புகள் மாறுபடலாம். மேலும் தகவலுக்கு வாடிக்கையாளர் சேவை மையத்தைத்தொடர்பு கொள்ளவும்.
உங்கள் ஆன்லைன் ரசீது உங்கள் பரிமாற்றம் அங்கீகரிக்கப்பட்டதா என்பதைக் காட்டும். பரிமாற்றம் முடிந்ததும், உங்கள் பணக் கண்காணிப்பு கட்டுப்பாட்டு எண்ணுடன் (MTCN) மின்னஞ்சலைப் பெறுவீர்கள்.
ஆம், நீங்கள் பயன்படுத்தலாம். கடந்த காலத்தில் நீங்கள் ஓர் ஏஜென்ட் மூலம் பணம் அனுப்பியிருந்தால், உங்கள் தரவு சேமிக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஆன்லைன் சுயவிவரத்தை உருவாக்கியதும், ID சரிபார்ப்புப் பக்கத்தில் ஏற்கெனவே சேமிக்கப்பட்ட பதிவுகளின் அடிப்படையில்€ என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்யலாம். சரிபார்ப்புக்குச் சில நிமிடங்கள் எடுக்கலாம். நீங்கள் உடனடியாக பணம் அனுப்ப வேண்டும் என்றால், உங்கள் அடையாளத்தை நிமிடங்களில் மேற்கொள்வதற்கு வீடியோ கலந்துரையாடல் விருப்பம் உதவும். உங்கள் ID சரிபார்ப்பு முடிந்ததும், உடனடியாக ஆன்லைனில் பணம் அனுப்ப முடியும். பதிவு செய்யும் போது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எங்கள் வாடிக்கையாளர் சேவையை ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் (மாண்டரின் காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டும்) தொடர்பு கொள்ளவும்.